தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் ‘விசாரணை’. இதில் தினேஷ், சமுத்திரகனி, கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை தழுவி இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பல்வேறு திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனுக்கு இப்படத்தை போட்டு காட்டியுள்ளனர்.
படத்தை பார்த்த கமல்ஹாசன் இயக்குனர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார். கமல் பாராட்டியது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.