அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கபர்டினோவில் விண்வெளிக் கப்பல் போன்ற வடிவில் பிரம்மாண்ட கட்டிடம் கட்டும் பணிகளை செய்துவருகின்றது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் கனவுத்திட்டமான இந்த வளாகத்திற்குள் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான அலுவலகமோ அல்லது கல்வித்தளமோ அமையும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இதன் வெளித்தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை ட்ரோன் கேமரா மூலம் வீடியோவாக டன்கன் சின்பீல்டு என்ற ஒளிப்பதிவாளர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.