கமல்ஹாசன் தொடர்ந்து பல கஷ்டமான முயற்சிகளை எடுத்து வருபவர். இவரது படங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘எனக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை, ஒரு இந்திய திரைப்பட கலைஞனுக்கு ஒரு பேச்சு சுதந்திரம் இல்லை.
இது தான் யதார்த்த உண்மை, மேலும் சுதந்திரம் என்பது நம் உடல் போல, அதை நாம் தான் ஊட்டி வளர்க்க வேண்டும்’ என கூறியுள்ளார்.