பொதுவாக தடகளம் மற்றும் கால்பந்து வீரர்கள் உடல்களை கடுமையான உடற்பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள்.
குறிப்பாக கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழும் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உடலைப் பார்த்தால் சிக்ஸ் பேக் வைத்திருப்பவர்கள் போன்று தோன்றும். தங்களுடைய கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாடும் வீரர்களை அவ்வாறு உடல்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில்லை. பந்து வீச்சாளர்கள் மட்டும் ஓரளவிற்கு உடலை நன்றாக வைத்திருப்பார்கள். ஆனால், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மட்டும் கிரிக்கெட் வீரர்களைப்போல் இல்லாமல் உடலை கடும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
கடுமையான உடற்பயிற்சியின் மூலம் சிக்ஸ் பேக் உடல்வாகு போன்று தனது உடலை மாற்றியுள்ளார். தற்போது தனது உடற்பயிற்சியை வீடியோவை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.