விஜய் சேதுபதி மீண்டும் தான் இழந்த இடத்தை நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பிடித்து விட்டார். இதனால், இதே வேகத்தோடு தன் அடுத்தடுத்த படங்களை வெளியிடவுள்ளார்.
அதில் எந்த தவறும் இல்லை, ஆனால், வாரத்திற்கு ஒரு படம் வெளியிட்டால் என்ன ஆவது, இவர் நடித்து சேதுபதி படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் பிப்ரவரி 19ம் தேதி திரைக்கு வருகின்றது.
இந்நிலையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படம் பிப்ரவரி 12ம் தேதி வர, இதனால், ஏதோ ஒரு படத்திற்கு வசூல் கண்டிப்பாக பாதிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதில் எந்த படம் தள்ளிப்போகும், சொன்ன தேதியிலேயே வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.