தமிழ் சினிமாவில் எல்லா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை நடிகர் டெல்லி கணேஷுக்கு உண்டு. அவர் தமிழ் சினிமாவில் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு குணச்சித்திரம், காமெடி, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடித்தவர்.
இவர் தற்போது தன்னுடைய மகன் மகாவை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். ‘என்னுள் ஆயிரம்’ என்ற படத்தில் கதாநாயகனாக மகா அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். ஓம் கணேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் டெல்லி கணேஷே இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலரை பார்த்த மாதவன் படத்தின் மகாவின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை பற்றி புகழ்ந்து பேசினார். இந்த படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.