முண்டாசுப்பட்டி, தெகிடி, வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்கள் மூலம் நம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியவர் காளி வெங்கட்.
இவர் அண்மையில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெற்றிநடைபோட்டு வரும் இறுதிச்சுற்று படத்தில் மிகவும் அருமையான வேடத்தில் நடித்திருப்பார். இதுகுறித்து காளி வெங்கட் பேசுகையில், இப்படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்திருப்பேன். ஹிந்தியில் இது என்னுடைய முதல் படம்.
பாலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி பார்த்த போது மிகவும் சந்தோஷப்பட்டேன். நான் நினைத்த மாதிரி இல்லாமல் ரொம்ப இயல்பாக நடத்துக் கொண்டார். அவரது வீட்டில் ரிகர்சல் செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம் என்று கூறினார்.
மேலும், இவரின் நடிப்பை கண்ட பாலிவுட் ரசிகர்கள் பலரும், யார் இந்த புது நடிகர், கலக்கியுள்ளாரே என கூறியது காளிக்கு டபூள் மகிழ்ச்சி தான்.