இந்தியாவின் பூனேயில் நேற்று நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து இலங்கை 102 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கியது. இறுதியில் 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்…