நடிகர் சங்க கட்டிடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து நடிகர் சங்கத்தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
இதன்பிறகு சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக இளம் நடிகர்களான கார்த்தி, விஷால், ஆர்யா, ஜீவா போன்றோர் இணைந்து ஒரு படம் நடிப்பதாக கூறியிருந்தனர்.இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியையும், உலகநாயகன் கமல்ஹாசனையும் ஆட வைக்க நடிகர் சங்க நிர்வாகிகள் இணைந்து திட்டமிட்டுள்ளனராம்.
இதுகுறித்து வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்கக் பொதுக்குழு கூட்டத்தில் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளனராம்.ஆனால் இது சாத்தியமா என்பது தான் தெரியவில்லை.
கமல், ரஜினி இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் தற்போது இவர்களின் மார்க்கெட் மிக மிக பெரியது. ரஜினி தற்போது ரூ. 350 கோடி பட்ஜெட் கொண்ட 2.0 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது