ஷங்கர் தற்போது 2.0 படத்தில் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டைக்காட்சியை வடிவமைக்க ஹாலிவுட் கலைஞர்களான கென்னி பேட்ஸ், ஆரோன் க்ரிபனும் சென்னை வந்துள்ளனர்.
இவர்கள் ஹாலிவுட் படமான ‘டை கார்ட்’ மற்றும் ‘ட்ரான்ஸ்பார்மர்ஸ்’ படங்களுக்கு சண்டைக்காட்சிகள் வடிவமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.