நடிகர் சங்க தேர்தலில் சூர்யா வெளிப்படையாகவே விஷால் அணிக்கு தான் ஆதரவு தந்தார். சூர்யாவின் தம்பி கார்த்தியும் விஷால் அணியில் தான் இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் சண்டக்கோழி-2 படம் ட்ராப் ஆனதாக விஷால் கூறினார். ஆனால், இதில் எந்த தவறும் இல்லை, ஆனால், படக்குழு எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்றது என்பது போல் டுவிட் செய்தார்.
என்ன தான் பிரச்சனை என்றாலும் அதை இத்தனை வெளிப்படையாக கூறி தான் ஆகவேண்டுமா? என பலரும் கேட்டு வருகின்றனர். இதேபோல் தான் சூர்யாவும் சில வருடங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படம் குறித்து படக்குழு படத்திற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அறிக்கையாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.