அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்தே. இப்படம் முடிந்த கையோடு இவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என பலராலும் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி அஜித் தன் 58வது படத்தை முருகதாஸிற்கு இயக்கும் வாய்ப்பை அளித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.இதற்கான பேச்சு வார்த்தை தற்போது செல்கின்றதாம்.
மேலும், முருகதாஸ், மகேஷ் பாபு படத்தில் தற்போது கவனம் செலுத்த, அஜித், சிவா இயக்கத்தில் நடித்து முடிக்க, இருவரும் அடுத்த வருடம் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.