ஓ காதல் கண்மணி படம் தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம். மணிரத்னம் இயக்கிய இப்படம் ஹிந்தியில் கரண் ஜோஹர் ரீமேக் செய்து தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்திருந்தது. பாலிவுட்டின் தற்போதைய இளம் ஹாட் ஜோடிகளான ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் இருவரும் இந்த ரீமேக்கில் நடிக்க இருக்கின்றனர்.
ஹாத் அலி இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை கரன் ஜோஹர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு படத்திற்கு ஓகே ஜாணு என்று பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்