கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்.
இப்படத்தில் அதிகமாக டபூள் மீனிங் வசனங்கள் இருந்ததாலும், பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாலும் பல எதிர்ப்புக்கள் கிளம்பியது.
தற்போது இதே கூட்டணி மீண்டும் இணையவுள்ளது, இப்படத்திற்கு விர்ஜின் மாப்ள என்று தலைப்பு வைத்துள்ளனர். தலைப்பே இப்படியுள்ளது என்றால் படம் எப்படியிருக்கும் என தற்போதே சமூக வலைத்தளங்களில் விவாதம் தொடங்கிவிட்டது.