‘காஞ்சனா 2’ படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கில் கல்ராணி ஹீரோயினாக நடித்து வருகிறார். சாய்ரமணி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளை தொடங்கி, வருகிற மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் லாரன்ஸ் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவருகிறார். மேலும், போலீஸ் அதிகாரியாகவும் இப்படத்தில் நடிக்கிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற தலைப்பு, ‘காஞ்சனா2’ படத்தில் லாரன்ஸ் பேசும் வசனத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.