பாகிஸ்தான் நடிகை கந்தீல் பலூச் ஆ, ஊ என்றால் நிர்வாண நடனம் ஆடுவதிலேயே குறியாக உள்ளார்.
பாகிஸ்தான் நடிகை கந்தீல் பலூச் என்றால் யார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆனார். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் அப்ரிதியை திட்டி வீடியோ வெளியிட்டார்.
அதன் பிறகு டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாண நடனமாடுவதாகவும், அப்ரிதி என்ன கேட்டாலும் செய்வதாகவும் தெரிவித்தார். பின்னர் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை திட்டி வீடியோ வெளியிட்டார்.
கோஹ்லி – நிர்வாண நடனமாடுவதில் இருந்து கோஹ்லி என்னை காப்பாற்றிவிட்டார். மோக்கா மோக்கா இல்லை என்று கந்தீல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காதல் – விராட் பேபி அனுஷ்கா சர்மா மட்டும் தான் இருக்கிறாரா? நானும் கோஹ்லி மீது காதல் கொண்டுள்ளேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் கந்தீல்.
நடனம் – பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தினால் நிர்வாண நடனமாடலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மக்களிடம் கந்தீல் கேட்டுள்ளார்.
அப்ரிடி – ஓகே, விமர்சித்தது போதும். அப்ரிடி நீங்கள் கலக்குறீர்கள்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் நீங்களும் ஒருவர் என்று அப்ரிடியுடன் சமாதானமாகிவிட்டார் கந்தீல்.