ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான ‘தி ராக்’ என்று அழைக்கப்படும் டிவைன் ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதனால், தமிழகத்தைப் போலவே அமெரிக்காவிலும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் ராக்கிடம், நீங்கள் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்குப் பதில் அளித்த ராக், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்வி மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருப்பதாகவும், ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் நிச்சயம் கால்பதிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருகட்சி ஆட்சி நடைபெறும் அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டிலும் ராக்குக்கு நல்ல மரியாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.