குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரீவா சோலங்கிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களது திருமணம் வருகிற 17-ந் திகதி நடக்கிறது. இந்த நிலையில் திருமண பரிசாக ஜடேஜாவுக்கு, தொழிலதிபரான ரீவாவின் தந்தை ஆடம்பர சொகுசு காரை வழங்கியுள்ளார்.
‘ஆடி கியூ7’ வகை காரான இதன் விலை ரூ.95 லட்சம் ஆகும். இல்வாழ்க்கையில் விரைவில் இணைய இருக்கும் இருவரும் இந்த சொகுசு காரில் ஒன்றாக வலம் வந்தனர்.