உலகின் அதிக மாசுபட்ட நகரமாக இதுவரை டெல்லி இருந்து வந்த நிலையில், டெல்லியை பின்னுக்கு தள்ளி ஈரானின் சாபோல் நகரம் அதிக மாசுபட்ட நகரமாக விளங்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதிக மாசு நிறைந்த உலகின் 5 நகரங்களில் இந்தியாவில் உள்ள 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
காற்றில் உள்ள நுண் துகள்களை குறிப்பிடும் பிஎம் 2.5 ஆண்டு சராசரி 122 என்ற அளவுக்கு இருப்பதால், உலகின் 10 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி 9-வது இடத்தில் உள்ளது. கோடைக்காலத்தில் புழுதி புயலால் பாதிக்கப்பட்ட ஈரானின் சாபோல் நகரம் அதிக அளவு பிஎம்.2.5 அளவீடு 217 என்ற அளவுக்கு உள்ளதால், அதிக மாசு நிறைந்த நகரமாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நான்கு நகரங்களும் இந்திய நகரங்களே ஆகும். கவாலியர், அலகாபாத், பாட்னா, மற்றும் ராஜ்பூர் ஆகியவை அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தை வகிக்கின்றன. உலகின் 20 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் 10 இடங்கள் இந்திய நகரங்களாகும். 2014 ஆம் ஆண்டில் 13 இந்திய நகரங்கள் இடம் நினைவு கூறத்தக்கது.