நகைச்சுவை கலாட்டாவில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்பவர் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தில் நடிக்கிறார்.
‘இனி நகைச்சுவை வேடங்களிலும், கதாநாயகனாகவும் நடிப்பேன்’ என்று அறிவித்துள்ளார். கத்திச் சண்டையில் வடிவேலு நடிக்கும் காமெடி காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருக்கின்றன.
இதில் வடிவேலு டாக்டராக நடிக்க இருக்கிறார். அவரது காட்சி என்ன என்பதை டைரக்டரிடம் கேட்டு நடித்து கொண்ட வடிவேலு, தனது காட்சியை கலகலப்பாக கொண்டு செல்ல எப்படி நடிப்பது என்பதையும் திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தில் சூரி, தாடி பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள். வடிவேலுவுடன் இவர்களும் சேர்ந்து நடிப்பதால் ‘கத்திச் சண்டை’ படத்தில் காமெடி காட்சிகள் ‘களை’ கட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து, மேலும் சில படங்களிலும் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டுள்ளார். இது தவிர ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’ 2–ம் பாகத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.