ரஜினிகாந்த் உடன் தப்புதாளங்கள், முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்தவர், சாந்தாராம். உதிரிபூக்கள், பூட்டாத பூட்டுகள் போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.
கன்னடத்தில் 40 படங்களில் நடித்து இருக்கிறார். கன்னட படங்களையும் டைரக்டு செய்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. சாந்தாராம் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.