விஜய் டிவியில் ‘அச்சம் தவிர்’ என்ற அதிரடி திரில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் திவ்யதர்ஷினி. நாளை ஜூன் 2 முதல் ஒவ்வொரு வியாழன் முதல் ஞாயிறு வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியின் நம்பர்-ஒன் தொகுப்பாளினி என்ற பெயரெடுத்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய, காபி வித் டிடி, ஜோடி நம்பர்-ஒன், விஜய் அவார்ட்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.
அந்த வகையில் 12 ஆண்டுகளாக விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளினியாக இருந்த டிடியின் காபி வித் டிடி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, அவர் அந்த டிவியில் இருந்தே விலகி விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த டிடி, மீண்டும் நான் விஜய் டிவியில் பிஸியாவேன் என்று கூறி வந்தார். அதற்கேற்ப தற்போது காபி வித் டிடி மட்டுமின்றி, காமெடி நிகழ்ச்சியான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் டிடி.