சமந்தா ஒரு பிரபல நடிகருடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் இருவருக்கு திருமணம் நடக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. அது தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா தான் என கிசுகிசுக்கபட்டது.
தற்போது அவர்கள் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெரிவிக்கிறது சமீபத்திய தகவல்.
சமீபத்தில் அவர்கள் இருவரும் ஒரு அபார்ட்மெண்டில் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருப்பது போல ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.
Gachibowliல் உள்ள நாக சைதன்யாவின் அபார்ட்மெண்டில் தான் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும், விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.