சல்மான்கான் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘சுல்தான்’ படம் இந்தி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளே ரூ.36 கோடி வசூலை குவித்து இருக்கிறது. இப்போது சல்மான் கான் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த படத்துக்கு ‘டியூப்லைட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கபீர்கான் இயக்கும் இதில் சல்மான் கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ஹாலிவுட் படங்களில் பிசியாகி விட்டதால் சல்மான் கானுடன் நடிக்கவில்லை.
எனவே கத்ரீனா கைப் அவருடன் நடிக்க இருக்கிறார். சல்மான் கானும், கத்ரீனா கைப்பும் முன்பு தீவிர காதலர்களாக இருந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த காதல் முறிந்து விட்டது. அதன் பிறகும் ‘ஏக்தா டைகர்’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.
என்றாலும் அந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. எனவே இந்த படத்தில் திறமையை காட்டி படத்தை ‘ஹிட்’டாக்க முன்னாள் காதலரும், காதலியும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சல்மான் கானும், கத்ரீனா கைப்பும் தீவிரமான ஒத்திகையில் இறங்கி இருப்பதாக இந்தி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.