கமல்ஹாசன் அண்மையில் மாடிபடியில் இருந்து தவறிவிழுந்ததால் அவருடைய காலில் எலும்பு முறிவடைந்திருந்தது. இதனால் அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து அவரது அண்ணன் சந்திரஹாசன் கூறுகையில், நேற்று மருத்துவர்கள் அவருடைய காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்தனர். ICUவில் இருந்து ஸ்பெஷல் வார்ட்டிற்கு வந்துவிட்டார்.
4 அல்லது 6 வாரத்திற்குள் அவரால் எழுந்து நடக்க முடியும் என்றார்.