த்ரிஷா தற்போது ‘மோகினி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை மாதேஷ் இயக்கி வருகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மதுர’ படத்தை இயக்கியவர். இப்படத்தில் த்ரிஷா, சமையல் கலை நிபுணராக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தாய்லாந்தில் தொடங்கவிருக்கின்றனர். தாய்லாந்து படப்பிடிப்பில் திரிஷாவுக்கு சண்டைக் காட்சிகள் எல்லாம் உள்ளதாக கூறப்படுகிறது.
நிஜமான ஸ்டண்ட் நடிகர்களுடன் கயிற்றில் தலைகீழாக தொங்கியபடியே இந்த சண்டைக் காட்சிகளை படமாக்க விருக்கிறார்களாம். இதற்காக தற்போது சென்னையில் திரிஷாவை தலைகீழாக தொங்கவிட்டு பயிற்சி கொடுத்து வருகிறார்களாம். டூப் போடாமல் இந்த சண்டைக்காட்சியில் நடிக்க திரிஷா முன்வந்ததாலேயே இந்த மாதிரியான பயிற்சிகளை அவருக்கு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.