விஜய்-அமலா பால் விவாகரத்து செய்தி தான் சில வாரங்களாக கோலிவுட்டில் ஹாட் டாபிக். யார் காரணம் என தொடங்கி, ஜீவனாம்சம் வரை தினமும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால்.. அமலா-விஜய் இடையே கருத்து வேறுபாடு பற்றிய செய்தியை நண்பர்கள் மூலம் அறிந்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், அமலாவை அழைத்து அறிவுரை சொல்ல நினைத்தாராம்.
ஆனால் அமலா பாலோ யாரின் பேச்சையும் கேட்க முடியாது, என மோகன்லாலை சந்திப்பதையே தவிர்த்துவிட்டாராம்.