போக்கிமோன் விளையாட்டில் தோன்றும் கதாபாத்திரத்தால் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ரஷியாவை சேர்ந்த பெண் பொலிசாரிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.
கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.
இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரை சேர்ந்த திருமணமான ஒருபெண் போக்கிமோன் விளையாட்டில் தோன்றும் கதாபாத்திரத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, பொலிசில் புகார் அளித்து உள்ளார்.
நான் தூங்கி கொண்டிருந்தபோது பெரிய உருவம் கொண்ட போக்கிமோன் என்மீது படுத்திருந்தது. நான் துள்ளி குதித்து கட்டிலில் இருந்து இறங்கியதும் அது மறைந்து விட்டது. இருப்பினும், எனது படுக்கை அறைக்குள் போக்கிமோன் கதாபாத்திரங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை எனது கைபேசியின் மூலம் என்னால் பார்க்க முடிகிறது என அந்தப் பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.