கபாலி படம் வெளியான பிறகு சர்ச்சைகளில் மட்டுமே சிக்கிய ராதிகா ஆப்தே மிகவும் பிரபலமானார்.
இவர் தற்போது இந்திய சினிமாவின் பிரபல பாடகியான ஆஷா போஷ்லேவுக்காக நடனம் ஆடியுள்ளார்.
ஆஷாவின் பிறந்தநாள் விழாவான நேற்று அவரை கௌரவிக்கும் விதமாக மும்பையின் மக்கள் கூடும் பிரபலமான இடத்தில் டான்ஸ் குழுவினருடன் சிறப்பு நடனம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.
இதற்கு பலரும் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் சில மணி நேரத்துக்கும் மேலாக டிரெண்டிங்கில் இருந்தார்.