லெனோவோ நிறுவனத்தின் K நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய ஆஃப்லைன் ஸ்டோர்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 15,000 விற்பனை நிலையங்களில் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என லெனோவோ தெரிவித்துள்ளது. புதிய லெனோவோ K6 நோட் ஸ்மார்ட்போனின் விலை 13,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய லெனோவோ K6 நோட் ஸ்மார்ட்போன் 3GB ரேம் / 32GB இன்டர்னல் மெமரி மற்றும் 4GB ரேம் / 64GB இன்டர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் வட்டியில்லா தவணை முறையில் வாங்க முடியும் என லெனோவோ தெரிவித்துள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் லெனோவோ K6 நோட் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச், 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 64-பிட் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டாகோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களின் மெமரியையும் கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4G, எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.1, மற்றும் GPS போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
லெனோவோ நிறுவனத்தின் ANT விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ட்ரோலர் உள்ளிட்டவை முறையே 1,299 ரூபாய்க்கும், 2,800 ரூபாய்க்கும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளன.