தமிழ் சினிமா ரசிகர்கள் 2016 முடிய இந்த வருடம் தங்களின் தேர்வாக ஒரு சில படங்களை குறிப்பிட்டு வருகின்றனர். இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளர் தாண்டி தற்போது சிறந்த காட்சிகள் எது என்பதையும் சில ரசிகர்கள் கூறியுள்ளனர். இதோ..
கபாலி – கபாலி படத்தின் டீசரிலேயே ரஜினி பேசும் ‘கபாலிடா’ வசனம் தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஹிட் அடித்தது.
தெறி – தெறி படத்தில் இளைய தளபதி விஜய் மேம்பாலத்தில் வில்லன் மகனை கொலை செய்து தொங்கவிட்டு, அடுத்த நாள் வில்லனிடம் பேசும் வசனம் பக்கா மாஸ் மெட்டிரீயல்.
சேதுபதி – விஜய் சேதுபதி நடித்த முதல் மாஸ் ஆக்ஷன் படம், இப்படத்தில் கிளைமேக்ஸில் போனிலேயே தன் மகனிடம் துப்பாக்கி எடுக்க சொல்லி சுட சொல்லும் காட்சி எப்போது பார்த்தாலும் விசில் பறக்கும்.
இறுதிச்சுற்று – மாதவன் பல வருடங்களுக்கு பிறகு ரீ-எண்ட்ரி ஆகி பாக்ஸராக வாழ்ந்திருப்பார், இப்படத்தின் கிளைமேக்ஸில் மாதவன், ரித்திகா சிங்கிற்கு புரிய வேண்டும் என்று தலையை ஆட்டி செய்கை செய்யும் காட்சி பெரிதும் பேசப்பட்டது.
24 – சூர்யா நடிப்பில் வெளிவந்த பிரமாண்டமான டைம் மிஷின் படம் இந்த 24, இப்படம் தமிழை விட தெலுங்கில் தான் மிகபெரும் வெற்றியை பெற்றது, இப்படத்தில் மழை வரும் போது சூர்யா தன் டைம் மிஷினை நிறுத்தும் காட்சி, முதன் முறையாக ஒளிப்பதிவிற்காக தியேட்டரே விசில் அடித்தது இதுவே முதன் முறை.
அச்சம் என்பது மடமையடா – இந்த வருடத்தின் சென்சேஷ்னல் என்றால் தள்ளிப்போகாதே பாடல் தான், ஏற்கனவே 2 கோடி பேர் இந்த பாடலை கேட்க, ஸ்கிரீனில் எப்படி வரும் என்று ரசிகர்களிடம் ஆவல் இருக்க, அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் ஒரு விபத்தில் தொடங்கும் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
இதே போல் இந்த வருடம் உங்களுக்கு எந்த படத்தில் எந்த காட்சி மிகவும் பிடித்தது என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.