பாலிவுட் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கரண்ஜோஹர். இவர் பற்றிய ஒரு சுயசரிதை புத்தகம் ‘An Unsuitable Boy இந்த மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது.
இதில் சர்ச்சையாக பேசப்பட்ட அவரது செக்ஸ் வாழ்கை பற்றி வெளிப்படையாக எழுதியுள்ளார். இதை அவர் கூறிய விஷயம் “எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து பலர் பலவிதமாக பேசி வருவதுண்டு. அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து வெளியே கூறினால் நான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும்.
ஏனெனில் எனது உறவு குறித்து புரிந்து கொள்ள முடியாத சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் நான் வாழ்ந்து வருகிறேன். எனவே நான் அந்த மூன்றெழுத்து வார்த்தையை வெளிப்படயாக கூறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தனது குடும்பம் தனக்கு தற்போது வரை மிக பெரிய ஆதரவு அளித்தவருவதாக தெரிவித்துள்ளார்.