தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ரூ 100 கோடி கிளம் என்பது மிகவும் கௌரவம் ஆகிவிட்டது. இந்நிலையில் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி ஆகிய படங்கள் இதுவரை இந்த கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் பைரவா படம் 4 நாட்களில் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டது, படத்தை எடுத்தவர்களே கூறிவிட்டார்கள், இனி என்ன கொண்டாட வேண்டியது தான் என ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.
ஆனால், தமிழகத்தில் முதல் 4 நாட்களில் ரூ 45 கோடி வரை வசூல் வந்திருக்கும், மற்ற மாநிலங்களில் ரூ 10 கோடி வசூல் செய்து இந்தியா முழுவதும் ரூ 55 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், வெளிநாடுகளில் ரூ 45 கோடி வசூல் செய்தால் மட்டுமே ரூ 100 கோடி வசூல் வர வாய்ப்பு உள்ளது, வெளிநாடுகளில் நல்ல வசூல் என்றாலும் ரூ 45 கோடி கண்டிப்பாக வசூல் வந்திருக்காது.
கண்டிப்பாக பைரவா ரூ 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி, ஆனால், அவை 4 நாட்களிலேயே வந்ததா? என்பது தான் சந்தேகம் எழுகின்றது.