கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கும் எதிராகவும் மிக பெரிய போராட்டம் தமிழகத்தில் உருவெடுத்தது. இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையால் பீட்டா அமைப்பில் இருக்கும் திரிஷா பெரியளவில் பாதிக்கப்பட்டார்.
அதன் பிறகு அந்த அமைப்பிலிருந்து தான் விலகிவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் பிரிட்டிஷ் நாயகி எமி மட்டும் இன்னும் அந்த அமைப்பில் உள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் எமி ஜாக்சனுக்கு பீட்டா அமைப்பு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளது.
இதை கண்ட ரசிகர்கள் இன்னும் பீட்டா அமைப்பிலிருந்து எமி விலக வில்லையா என்று எமியை திட்டி வருகின்றனர். இதனால் மீண்டும் பிரச்சனையில் எமி சிக்குவாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.