நடிகர் தனுஷ் இன்று மிகவும் வேகத்துடன் தனது திறமையை மேலும் மேலும் முன்னெடுத்து வருகிறார். பவர் பாண்டி படத்தை இயக்குவதோடு தானும் VIP 2, ENPT என படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல் 45 நிமிடங்கள் சிறைச்சாலையை மைய்யபடுத்தி தான் கதை நகரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெற்றி மாறன் விசாரணை படத்திலும் சிறையை காண்பித்து தான் எடுத்திருந்தார். இதனால் வடசென்னை படத்தில் தனுஷுக்கும் ஜெயிலுக்கும் என்ன தொடர்பு, அவருடைய கேரக்டர் என்ன, முதல் பாதியில் அவர் என்ன செய்வார் என சில கேள்விகள் எழுந்துள்ளது.
இதன் ஷூட்டிங் சென்னை பின்னி மில்லில் செட் போட்டு படமாக்கபடவுள்ளது.