பிரபல மாடல் அழகி சோனிகா சிங் சௌஹான் கொல்கத்தாவில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார்.

அவருடன் காரில் சென்ற நடிகர் விக்ரம் சாட்டர்ஜி பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ராஷ்பேஹரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் மிக வேகத்துடன் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதியதாகவும், பின்னர் அருகிலிருந்த கடைகுள் புகுந்து சேதமடைந்ததாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நொருங்கிய காரிலிருந்து இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தபோது, சோனிகா சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த விக்ரம் சாட்டர்ஜிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

குடிபோதையில் விக்ரம் சாட்டர்ஜி காரை ஓட்டினாரா என்பது குறித்து பொலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்ரம் சாட்டர்ஜி வங்காள, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.