பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா
கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம்,
ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் – ‘பாகுபலி தி
கன்க்ளூஷன்’ (பாகுபலி 2).
இந்தப் படம், கடந்த வெள்ளியன்று வெளியானது.
படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது. அதேபோல
பாராட்டுகளும் குவிந்துவருகின்றன.
பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டர்
பக்கத்தில் கூறியதாவது:
பாகுபலி 2 ராஜ்ஜியத்தில் நானும் ஒருத்தி என்பதுபோல
உணர்கிறேன்.
இந்தப் படம் முடிவதில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை
என்று தெரிவித்துயுள்ளார்.