ஒரு நாளில் வெறும் ரூ.130 வை மட்டும் வருமானமாக கொண்டு வாழ வேண்டும் என்றால், அதற்கு பில்கேட்ஸ் அசத்தும் ஐடியாவை வைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக பில்கேட்ஸ் விளங்குகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 87.2 பில்லியன் அமெரிக்க ெடாலராக உள்ளது.
இந்த நிலையில் தனது வலைப்பதிவில் வாழ்வை மேம்படுத்த சில யோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒரு நாளை வெறும் ரூ.130 வை மட்டும் கொண்டு கடந்து செல்ல வேண்டும் என்றால், எவ்வாறு செலவிடுவீர்கள் என்று நேயர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளிக்கும் பதில் கோழிகள்.
தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அவர், பல்வேறு ஏழை நாடுகளில் ஏராளமானோரைச் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் மூலம் மிகவும் தெளிவாக அறிந்து கொண்டது கோழிகள் பற்றியது தான் என்று கூறியுள்ளார்.
விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவாக இருப்பதால், அவற்றை எளிதில் வளர்க்கலாம்.
அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
கடின உழைப்புடன், உரிய பராமரிப்பும் மேற்கொண்டால் கோழி வளர்ப்பில் கூட மிகப்பெரிய மனிதராக உருவாக முடியும் என்று தெரிவித்துள்ளார்.