சத்யமேவ ஜெயதே போன்ற நிகழ்ச்சிகளைச் செய்வதை விட, நான் நிஜத்தில் நிறையவே செய்திருக்கிறேன் என்று நடிகர் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் நடந்த பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் பிரசன்னமாகியிருந்த கமல் ஹாஸனிடம், “அமிர்கான் நடத்திய ‘சத்யமேவ ஜெயதே’ போன்ற நிகழ்ச்சியைச் செய்யாமல் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்களே?” என ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த கமல் ஹாஸன், “அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை.
அமிர்கானை விடவும் அதிகமாக நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன்.
இதை நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன்,” என்று கமல்ஹாசன் கூறினார்.