நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து பா. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தொடங்கியது.
தொடர்ந்து 40 நாட்களுக்கு மும்பையில் படபிடிப்புகள் நடைபெறும் என திரைப்பட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலா திரைப்படத்தில் நடிக்கும் கலைஞர்களின் முழு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
காலா படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார்.
ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, சுகன்யா உள்பட பல கலைஞர்கள் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரஜினிகாந்துக்கு ‘காலா’ 164-ஆவது திரைப்படமாகும்.
இதற்கு முன்பு வெளியான கபாலி திரைப்படத்தை இயக்கியவர் ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.