உக்ரேனில் வீதியொன்றின் கீழ் இருந்த பாரிய நீர் குழாய் திடீரென வெடித்து மேலெழுந்துள்ளது.
இதன்காரணமாக, வீதியின் மேற்பகுதி வெடித்து அருகில் இருந்த பல வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.