நடிகர் சாந்தனு VJ கீர்த்தி 2015ல் திருமணம் செய்துகொண்டனர். இளையதளபதி விஜய் தான் அவர்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் கீர்த்தி.
“திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் குண்டாகிவிட்டேன், அது எனக்கே தெரிகிறது” என ஒரு பேட்டியில் கூறியுள்ள அவர் தன் கணவருக்கு உணவு விஷயத்தில் அடிக்கடி கண்டிஷன் போட்டு கொண்டே இருப்பாராம்.
“அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக்கூடாதுனு சாந்தனுவுக்கு கண்டிஷன் போட்டுட்டே இருப்பேன். என் மாமியார் பூர்ணிமாவோ, ‘நல்லா சாப்பிடும்மா, இளைச்ச மாதிரி இருக்கே’னு சொல்வாங்க” என கூறியுள்ளார் கீர்த்தி.