ஒரு படத்தில் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் ஃபாரினில் பப்ளிக்கில் கிஸ் அடிக்கலாம், பிஸ் அடிக்க முடியாது. இந்தியாவில் பப்ளிக்கில் பிஸ் அடிக்கலாம் ஆனால் கிஸ் அடிக்க முடியாது என கிண்டல் செய்திருப்பார்.
இது நகைச்சுவை மட்டுமல்ல உண்மையும் கூட. உலகில் ஒருசில நாடுகளில் உடலுறவு சார்ந்த சில செயல்பாடுகளை செய்வது குற்றமாகவும், அதற்கு தகுந்த தண்டனைகளும் அளிக்கப்படுகின்றன…
#1 நேபாளத்தில் நிர்வாண படம் எடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
#2 வியன்னா, ஆஸ்திரியாவில் பொது போக்குவரத்து வாகனங்களில் முத்தமிட்டுக் கொள்வது அபராதத்திற்கு உரியது.
#3 இந்தியாவின் சில மாநிலங்களில் பொது இடத்தில முத்தமிட்டுக் கொண்டால், அபராதம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும்.
#4 லண்டனில் மோட்டார் வாகனங்களில் உடலுறவில் ஈடுப்படுவது சட்டவிரோத செயல்.
#5 எகிப்தில் தவறான உறவு அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டால் பெண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையும், ஆண்களுக்கு ஆறு மாதங்கள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
#6 கத்தாரில் நெருக்கமான பாலுணர்வை தூண்டும்படியான படங்களை பொது இடங்களில் டிஸ்ப்ளே செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.
#7 டெக்சாஸில் செக்ஸ் பொம்மைகளை வைத்திருப்பது குற்றம் என பல இணையதளங்களில் கூறப்பட்டுள்ளன.
#8 துபாயில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கே ஓரினச்சேர்க்கையில் ஈடுப்படுவதே சட்ட விரோதமாக கருதப்படுகிறது.
#9 மேலும், துபாயில் திருமணத்திற்கு முன்னர் அல்லது திருமணம் செய்த நபரை தவிர வேறு நண்பருடன் செக்ஸில் ஈடுபடுவது வழக்கு தொடரவும், தண்டனை பெறும் குற்றமாக கருதப்படுகிறது. அதே போல திருமணமாகாத நபருடன் லிவ்விங் டுகெதர் மாறும் ஒரே ஹோட்டல் அறையை ஷேர் செய்துக் கொள்வதும் தவறு.
#10 சிங்கப்பூரில் ஹோட்டல் அறையை விட்டு வெளியே நிர்வாணமாக சுற்றினால் கைது செயப்படுவார்கள்.