ஜூன் 22-ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“THALAPATHY VIJAY MONTH BEGINS” – தளபதி விஜய் மாதம் துவங்கியது என்று இந்த ஹேஷ்டேக்கின் பெயர்.
இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் சென்னை நகர ரீதியாகவும், அனைத்து இந்திய ரீதியாகவும் டிரெண்டிங்கில் உள்ளது.
நாளை மறுநாள் (ஜூன் 3-ஆம் திகதி) திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அவரது சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்படவுள்ளது.
இந்தநிலையில், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் தீவிரமாக இயங்கும் தி.மு.க.வினர் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே டிவிட்டர் டிரெண்டிங்கில் பலத்த போட்டி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு வலைதள பிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.