இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு, நாம் கடைகளில் வெளிப்படையாக வாங்க முடியாத பல பொருட்கள் தற்போது எளிமையாக யாருக்கும் தெரியாமல் ஆசால்டாக வாங்க முடிகிறது.
நான் கூறுவது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
தற்போது இப்பட்டியலில் புதிதாக இன்னும் ஒரு பொருள் இணைந்துள்ளது.
புதிதாக இணைந்துள்ள பொருட்களுக்கு பெண்களை விடவும் ஆண் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.
இப்பிரிவு சார்ந்த விற்பனையை உடனடியாக அரசு கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளது.
ஈகாமர்ஸ் சந்தை இந்தியாவில் ஈகாமர்ஸ் சந்தையின் அறிமுகம் சில வருடங்களுக்கு முன்னதாகவே இருந்தாலும், அதன் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து தற்போது நம் கண்முன்னே நிற்கிறது.
ஆனால் இதில் பல கருப்புப் பக்கங்கள் உள்ளது அது யாருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.
காமம்
இந்தியாவில் இன்றளவும் மருந்தகங்களில் காண்டம் வாங்குவது எந்த அளவிற்குக் கடினம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இவை அனைத்தையும் அடித்து ஓடவிடும் வகையில் 3 வருடங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் தளத்தில் sexual wellness என்ற தனி வர்த்தகப் பிரிவு துவங்கப்பட்டது.
முக்கிய நிறுவனங்கள் காமசூத்ரா, தட்ஸ்பர்சனல், ஒமைசிக்ரட்ஸ்,ஒஎம்பேஷ்ரம் போன்ற பல நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் களமிறங்கியது.
இந்நிறுவனங்கள் வெண்ணிலா காண்டம், பெண்களின் உள்ளாடை போன்ற சாக்லெட்கள் (edible lingerie), விளையாட்டுப் பொம்மைகள் (குறிப்பு: அந்த விளையாட்டு), விளையாட்டிற்குத் தகுந்த உடைகள் எனப் பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியது.
இன்று இப்பிரிவில் இணைந்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 45ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவில் பெரு நகரங்களில் கூட மக்கள் இத்தகைய பொருட்களை எளிதாக வாங்க முடியும் நிலையில் ஈகாமர்ஸ் தளத்தில் இத்தகை பொருட்களின் அறிமுகத்தின் மூலம் சிறு நகரங்களில் இருக்கும் மக்கள் தங்களது காம உணர்வுகளையும், இச்சைகளையும் தீர்த்துக்கொள்ளும் தளமாக மாறியது என்பதே உண்மை.
புதிய பொருள் மேலே கூறப்பட்டவை அனைத்தும் சந்தையில் மழைக் காலத்தில் மிளகாய் பஜ்ஜி விற்பனை போல் பரபரவென விற்பனை ஆகி வரும் நிலையில், இதற்குப் போட்டியாகப் புதிய பொருள் ஈகமார்ஸ் சந்தையில் வெற்றிநடை போடுகிறது.
பெண்கள் உள்ளாடை
இன்றைய நிலையில் பெண்கள் உள்ளாடை ரீடைல் கடைகளில் செய்யப்படும் விற்பனையை விட ஆன்லைனில் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.