ப்ரீ மேரேஜ் ஷூட் என்பது இன்று பலரும் அறிந்தது தான். முன்பெல்லாம் திருமணத்திற்கு பிறகு நிச்சயமே ஆகியிருந்தாலும் பெண்ணை ஒரு முறை சென்று பார்த்து வர அச்சம் கொள்வார்கள். வீட்டில் இருக்கும் பெரியோர் அதட்டி, அதுக்குள்ள என்னடா அவசரம் என மண்டையில் ஒரு குட்டு வைத்து அமர்த்தி விடுவார்கள்.
ஆனால், இன்று நிச்சயம் ஆவதற்கு முன்னரே காதல், திருமணத்திற்கு முன்னரே ஸ்பெஷல் போட்டோஷூட் என வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ப்ரீ மேரேஜ் ஷூட்டில் வித்தியாசம் என்ற பெயரில் வேற லெவலில் படங்கள் எடுத்துக் கொண்ட சூப்பர் ஜோடிகளை பற்றி இங்கே காணலாம்…