பிரேசில் நாட்டில் சாண்டா கேட்ரீனா பகுதியை சேர்ந்த ஒரு பெண் விற்பனையாளரிடம் (‘டீலர்’) புதிய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். ஆனால் அந்த கார் வாங்கிய 2 நாளிலேயே பழுதடைந்தது.
எனவே ஒரு மெக்கானிக்கிடம் அந்தகாரை கொடுத்தார். அதை பரிசோதித்த அவர் காரின் வெளிப்பகுதி மட்டும் புதிதாக உள்ளது. உள்ளே இருக்கும் உதிரி பாகங்கள் அனைத்தும் பழுதடைந்தவை என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கார் விற்பனையாளரை அணுகினார். எண்ணை ஏமாற்றி பழைய காரை என்னிடம் விற்று விட்டீர்களே” இது நியாயமா, என தட்டிக் கேட்டார்.
அதற்கு தட்டிக்கழித்த அவர் கார் விற்றவுடன் எனது வேலை முடிந்து விட்டது. அதன் பின் வரும் பிரச்சினைக்கு நான் பொறுப்பில்லை என கூறி நழுவிவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தபெண் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். கார் விற்பனையாளரின் வீடு வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் உள்ளது.
சம்பவத்தன்று அங்கு சென்ற பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அவரது வீட்டின் முன்பு நின்றபடி தனக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தினார். மேலும் அவரது வீட்டின் ‘கேட்’ மற்றும் தடுப்பு வேலிகளை கீழே தள்ளி சேதப்படுத்தினார்.
இக்காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இவரது செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் புகார் செய்தனர்.
உடனே அங்கு வந்த பெண் போலீசார் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட அவரை அழைத்து சென்றனர்.