டிவி, சினிமா என கலக்கிவருபவர் நடிகை டிடி. பிரபல சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் இவர் அன்புடன் டிடி என்ற ஷோவை ஹோஸ்ட் செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு அழைப்பாளராக இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொள்கிறார்.
ராக்ஸ்டாரான இவருக்கு பல இளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். எனவே விவேகம் படம் பற்றியும், அஜித் பற்றியும் முக்கியமான விசயங்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விஜயின் அடுத்த படத்தை அனிருத் தான் இசையமைக்கிறார் என்ற செய்திகளும் வந்தது. எனவே இருதரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தான்.