எல்லோருக்கு பிடித்தமான லவ் ஹீரோ ஜெய். இவரும் நஸ்ரியாவும் சேர்ந்து நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் படம் கடந்த 2014 ல் வெளியானது.இப்படத்தில் நடித்தவர் தீக்ஷிதா மாணிக்கம்.
இவர் அகம், நகர்வலம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மாடலழகியான இவர் இசையமைப்பாளர் தரணை காதலித்து வந்தார்.தரண் போடா போடி, சமர், தகராறு, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் போன்ற 25 படங்களுக்கு இசையமைத்துள்ளாராம்.
இருவரது வீட்டிலும் சம்மதம் கொடுத்துவிட்டதால் இவர்கள் செப்டம்பர் 15 ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்கிறார்களாம்.