சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. எதிர்பாராமல் நடக்கும் சில நிகழ்வுகள் அவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்திடும்.
அப்படியான ஒரு நிகழ்வு தான் பாலிவுட்டில் பிரபல காமெடியன் மனோஜ் கோயலுக்கு நடந்துள்ளது. பெரும் டிவி நடிகரான இவரின் மனைவியின் பெயர் நீலிமா.
மும்பை கண்டிவாலி பகுதியில் வசித்து வரும் இவருக்கு 8 வயதுள்ள மகள் இருக்கிறாள். இந்நிலையில் நேற்று மதியம் நீலிமா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மனோஜ் ஷூட்டிங்கில் இருக்க, மகள் டியூசனுக்கு சென்ற சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விசாரணையில் நீலிமாவுக்கு கடும் மனஅழுத்தம் பிரச்சனை இருந்துள்ளது.
அது அதீத நிலைக்கு சென்றதால் தான் அவர் இப்படி முடிவு எடுத்துள்ளார் என குறிப்பிடத்தக்கது. மேலும் கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதும் வெளிவந்துள்ளது.